kai kodutha karigaiyar

கை கொடுத்த காரிகையர்

pennநாயன்மார்களுக்கு தூணாய் இருந்த மகளிர் வரலாறு.

 

ஜயலக்ஷ்மி

சென்னை

 

ஜயலக்ஷ்மி

vannaijaya@gmail.com

 

மேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார்

மின்னஞ்சல்: socrates1857@gmail.com

மின்னூலாக்கம் : த.சீனிவாசன்

மின்னஞ்சல் : tshrinivasan@gmail.com

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

Click Link For Download : http://freetamilebooks.com/ebooks/kai-kodutha-karigaiyar/

Seethayanam

சீதாயணம்

ஆசிரியர் : சி. ஜெயபாரதன்

பொருளடக்கம்

சமர்ப்பணம்
தீண்டப்படாத சீதா
நாடக நபர்கள்
1. சீதா நாடு கடத்தப்படல்
2. வால்மீகி ஆசிரமத்தில் சீதா அடைக்கலம்
3. ஆசிரமத்தில் லவா, குசா இரட்டையர் பிறப்பு
4. அயோத்திய புரியில் ஆரம்பித்த அசுவமேத யாகம்
5. லவா, குசா, இராமன் முதல் சந்திப்பு
6. முடிவை நோக்கிச் சீதா
Picture Credits
சீதாயணம் ஓரங்க நாடகத்தின் பின்னுரை
ஆசிரியரைப் பற்றி
Free Tamil Ebooks – எங்களைப் பற்றி

Click Link For Download : http://freetamilebooks.com/ebooks/seethayanam/

 

Thiruppavai

ஆண்டாள் அருளிய திருப்பாவை

Untitled

 

 

 

 

 

 

 

 

 

கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்

மார்கழி மாதம் பெளர்ணமியில் துவங்குகிறது திருப்பாவை.
ஆண்டாளின் திருப்பாவை முப்பது பாடல்களும், ‘சங்கத் தமிழ்மாலை’ என்று போற்றப் படுகின்றன. திருப்பாவை என்பது பின்னர் வைத்த பெயராக இருக்கலாம்.

ஆண்டாளின் பாவை நோன்புக்கான கிரிசைகள் (காரியங்கள் ) எளிமையானவை. எல்லாப் பெண்களும் கடைப்பிடிக்கக்கூடியவை. அவள், தோழிகளை எழுப்பி நீராட அழைக்கும் காலை நேரப் பாடல்களில் இருக்கும் நுட்பமான அன்றாடச் சங்கதிகள் பல நம்மை பிரமிக்க வைக்கின்றன.

திருப்பாவையில் பொழுது விடிவதற்குரிய அடையாளங்கள் பல கூறப்பட்டுள்ளன. காலை நேரத்தின் பலவித சப்தங்களையும், நடைமுறைகளையும் இயல்பாகச் சொல்லும் திருப்பாவை, பக்தியும் இலக்கிய நயமும் கலந்த மிகச் சிறந்த நூல்களில் ஒன்று.

 

ஆண்டாள் அருளிய திருப்பாவை

பத்து பைசா பதிப்பகம்
சுஜாதா தேசிகன்

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

Click Link For Download : http://freetamilebooks.com/ebooks/thiruppavai/

Kambaramayanam Text

உரைநடையில் கம்பராமாயணம்

 இந்தியாவின் தொன்மையான இதிகாசங்களுள் ஒன்று இராமாயணம் ஆகும். இரகு வம்ச அரசனான இராமனின் கதையைக் கூறுவது இராமாயணம் ஆகும். (இராம+அயனம் = இராமாயணம்) இக்கதையை முதலில் வடமொழியில் வால்மீகி, வசிட்டர், போதாயனார் ஆகிய மூவரும் செய்தனர். தமிழ்மொழியில் இராமகாதையாக வடித்தவர் கம்பர் ஆவார். கம்பர் எழுதியதால் இக்காப்பியம் கம்பராமாயணம் என வழங்கப்பெறலாயிற்று.

கம்பர் இக்காப்பியத்தை அதன் மூலமான வடமொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தார். அந்த முயற்சியை ஓர் அரிய உவமையின் வாயிலாக வெளிப்படுத்துகிறார். பசியுடைய பூனை ஒன்று பாற்கடலைக் கண்டு அதை நக்கிக் குடித்துவிட ஆசைகொண்டதுபோல தன் முயற்சியை ஒப்பிடுகிறார். இது அவையடக்கமாகக் கொள்ளப்படுகிறது. கம்பர் இராமகாதையை எழுதுவதற்கு உறுதுணையாக இருந்தவர் சடையப்ப வள்ளல் ஆவார். இதற்கு நன்றிபாராட்டும் விதமாக தனது காப்பியத்தில் ஆயிரம் பாடல்களுக்கு ஒருபாடல் எனும் வீதத்தில் சடையப்ப வள்ளலைப் போற்றிப் பாடியுள்ளார்.

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
http://ta.wikipedia.org/s/1h

கம்பராமாயணத்தை தஞ்சை வெ.கோபாலன் அவர்கள் உரைநடையில் எழுதி கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் வெளியிட்டுள்ளார். அதை மின்னூலாக வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.

 

ஆசிரியர் : தஞ்சை வெ.கோபாலன்

privarsh@gmail.com

வலைத்தளம் : http://kambaramayanam-thanjavooraan.blogspot.com/

படம் : http://yogeshvara.deviantart.com/art/JAYA-SITA-RAMA-334945904

உரிமை : கிரியேடிவ் காமன்ஸ்

தமிழ் மின்னூல்களைப் பல்வேறு கருவிகளில் எவ்வாறு படிக்கலாம் என்பதற்கான வழிகாட்டி

Click Link For Download : http://freetamilebooks.com/ebooks/kambaramayanam-text/

Abirami Andhadhi

அபிராமி அந்தாதி

Abirami_Ma

 

அபிராமி அந்தாதி (அந்தம்-முடிவு, ஆதி-துவக்கம்) அபிராமி பட்டரால் இயற்றப்பட்டது.  குமரன் அவர்களின் இந்த புத்தகம் மூலம் அபிராமி அந்தாதிக்கு ஓரு எளிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சில பாடல்களுக்கு அந்தாதித் தொடை, அருஞ்சொற்பொருள், எதுகை மற்றும் மோனையுடன் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு பாடலின் முடிவிலும் அந்த பாடலினால் எற்படும் பலனும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் : குமரன்

kumaran.malli at gmail.com

வலைத்தளம் : http://abiramibhattar.blogspot.in

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

Creative Commons Attribution 4.0 International License.

Click Link For Download : http://freetamilebooks.com/ebooks/abirami-andhadhi/

Pattinathar Songs

பட்டினத்தடிகளின் பாடல்கள்

pattinathar_padalgal_ecover_by_sagotharan-d77dfh1

 

 

 

 

 

 

 

பட்டினத்தார் நம் தமிழ்நாட்டில் பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவம் தந்த சிவச் செல்வராவார். கடலோடி பொருள்தேடும் வைசிய குலத்து அவதரித்த செல்வர். வாழ்வின் செல்வச் செறுக்கையும், போகங்களையும் வெறுத்து, இறைவன் திருவருளை நாடி கட்டிய கோவணமும், நாவில் தவழ்ந்திடும் சிவநாமமும் உடன்வர கால் போன போக்கில் நடக்கலானார். “காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” எனும் பொன்னான போதனையை உளத்தில் கொண்டு, அதுவே சத்தியம், அதுவே இறைவன் நமக்களித்த வரம் என்று உணர்ந்து அதனை ஒரு ஓலை நிறுக்கில் எழுதிப் போட்டுவிட்டுத் தன் கால் போன போக்கில் செல்லத் துவங்கினார்.

 

ஊர் ஊராய்ச் சென்று சிவதரிசனம் செய்து, யாக்கை நிலையாமை, பூமியில் சிற்றின்பக் கேணியில் மூழ்கிக் கிடந்து இறைவன் அருள் எனும் பேரருள் பெருங்கடலை மறந்த மக்களுக்கு இடித்துரைப்பது போல் உண்மைகளை உணரவைக்கும் பாடல்களைப் பாடிக் கொண்டு பரதேசியாத் திரிந்தார். உள்ளத்தை மெல்ல வருடிக் கொடுத்து உண்மைகளை மெல்லப் புகட்டும் பழைய பாதையை விட்டு நீங்கி, உள்ள உண்மையை போட்டு உடைத்து நம் கண் முன்னே பாதை தெரியுது பார் என்று உந்தித் தள்ளும் பாடல்கள் அவை.

 

போலித்தனமும், பொய்மையும், சுயநலமும், நிரந்தரமில்லா சிற்றின்பமும் வாழும் முறைக்கு ஏற்றதல்ல, ஈசன் இணையடி நிழலே நாம் வேண்டும் நிரந்தர பேரின்பம் என்பதை பறைசாற்றும் பாடல்கள் அவை. சொல்லுகின்ற சொல் கடுமையாய், உள்ளத்தைச் சுடும்படியாய், உள்ளதை உள்ளபடி கேட்கக் கூசினாலும் அதுவே முற்றிலும் உண்மை என்பதை உணரச் செய்யும் பாடல்கள்.

 

மனதுக்கும், செவிக்கும், கண்களுக்கும் தற்காலிக இன்பம் சேர்க்கும் கலை போலன்றி பட்டினத்தார் பாடல்கள் உண்மையை விண்டுரைக்கும் சத்திய வாக்கு என்பதால், மருந்து கசக்குமென்றாலும், உண்மை சுடும் என்றாலும், பிறவிப் பேற்றுக்கு அதுவே மருந்து என்பதால் பட்டினத்தார் சொற்களை விரும்பிப் படிக்க வேண்டும். இது அந்த நோக்கத்துக்காகச் செய்யப்பட்ட ஒரு எளிய முயற்சி. படித்தபின் கருத்தைப் பதிவு செய்யுங்கள். நன்றி.

 

அன்பன்,

தஞ்சை வெ. கோபாலன்

 

பட்டினத்தடிகளின் பாடல்கள்

ஆசிரியர் : தஞ்சை வெ.கோபாலன்

அட்டைப்படம்  : ஜெகதீஸ்வரன்

http://sagotharan.deviantart.com/art/Pattinathar-Padalgal-ECover-435647125

 

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

 

Om Namasivaya

ஓம் நமச்சிவாயா – திருக்கைலை யாத்திரை

kailash

 

 

 

 

 

 

 

 

இமயம் குறித்த பெருமை இந்தியர் அனைவருக்கும் சிறு வயது முதலே உண்டு.  அந்த இமயச் சிகரங்களில் ஒன்றான திருக்கைலை யாத்திரை என்பது எல்லாராலும் செல்ல முடிந்த ஒன்றல்ல.  மிகக் கடினமான யாத்திரை.  ஆனால் வருந்தத் தக்கது என்னவெனில் இந்த திருக்கைலை இந்தியர்கள் அனைவருக்கும் புண்ணிய ஸ்தலமாகவும் ஈசனே திருக்கைலாய நாதனாகவும் இருக்க, அது அமைந்திருக்கும் பகுதியோ சீனாவிடம் சென்றுவிட்டது. நினைத்த உடனே செல்ல முடியாத இடம்.  இதற்கும் நம் முன்னோர்கள், ஆசாரியர்கள் பலர் சென்று வந்துள்ளதாகக் கேள்விப் படுகிறோம்.  சேரமான் பெருமாள் நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார்,ஒளவைப்பாட்டி போன்றோர் இங்கே சென்றுள்ளனர்.  காரைக்கால் அம்மையார் திருக்கைலையை மிதிக்கக் கூடாது எனத் தலையாலேயே தலைகீழாகச் சென்றார் எனக் கேள்விப் பட்டிருக்கிறோம். அத்தகைய புண்ணிய சீலர்கள் மிதித்த, நடந்த திருக்கைலையை தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் எழுவதிலும் ஆச்சரியம் இல்லை அல்லவா?

 

நம்பன் றிருமலை நான்மிதி யேனென்று தாளிரண்டு
மும்பர் மிசைத்தலை யானடத் தேற வுமைநகலுஞ்
செம்பொன் னுருவனென் னம்மை யெனப்பெற் றவள் செழுந்தேன்
கொம்பி னுகுகாரைக் காலினின் மேய சூலதனமே.

 

அப்படிப் பட்ட  புகழ் வாய்ந்த திருக்கைலை யாத்திரை செல்வது என்பது சாமானியத்திலும் சாமானியமான எனக்குக் கிடைக்கப் பெற்றது என் வாழ்நாளின் தவப்பயனால் அன்றோ!  அத்தகைய யாத்திரையை எனக்கு முன்னரும் பலரும் சென்றிருக்கின்றனர்.  பலரும் எழுதி இருக்கின்றனர்.  என்றாலும் ஒவ்வொருவர் அனுபவங்களும் ஒவ்வொரு மாதிரியானவை.  இதிலே யாத்திரையின் போது நாங்கள் எதிர்கொள்ள நேர்ந்த சம்பவங்கள், சங்கடங்கள் என அனைத்தையுமே பகிர்ந்துள்ளதால் இனி வரும் நாட்களில் செல்வோருக்கு இதில் நாங்கள் செய்த தவறுகளை அவர்கள் தொடராமல் இருக்க ஏதுவாக இருக்கும்.  மேலும் நாங்கள் சென்றபோது இருந்ததை விட இப்போது சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிகிறோம். அதோடு ஹெலிகாப்டர் பயணமும் செய்து கொடுக்கின்றனர்.  இதில் சாலை வழியில் செல்லும் ஐந்து நாட்கள் போக, திரும்ப ஐந்து நாட்கள் என்ற பத்து நாட்கள் மிச்சப்படுத்தலாம்.  ஆனால் பணம் கூடுதல்.  என்றாலும் சாலை வழிப் பயணத்தில் எதிர்கொள்ளும் ஆபத்து இதில் நேராதிருக்கும் எனக் கைலை நாதன் அருளை நினைத்துச் செல்லலாம். யாத்திரைக்குத் தேவையான பொருட்களின் பட்டியலும் கொடுக்கப்பட்டுள்ளது. எத்தனை நாட்கள் பயணம் ஆனாலும் இந்தப் பொருட்கள் பட்டியலில் மாற்றம் இருக்காது.  மேலும் இந்திய வழி, நேபாள வழி ஆகிய இரு வழிகளிலும் உள்ள நன்மைகள், தீமைகள் எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது.
இந்திய வழி நீண்ட வழிப் பிரயாணம் என்றாலும் அதில் ஆபத்துக்கள் அதிகம் இருந்தாலும் அது தான் சரியான வழி.  நேபாள வழி குறுக்கு வழி என்பதோடு மருத்துவப் பரிசோதனைகள் இல்லாமல் செல்லும் வண்ணம் ஏற்பாடுகள் செய்கின்றனர்.  இதில் நம் உடல்நிலைக்கு நாமே முழுப் பொறுப்பு.  அதையும் நினைவில் கொள்ள வேண்டும்.  கைலைநாதன் அருளினால் நாங்கள் நல்லபடி சென்று வந்திருந்தாலும் பலரும் அவதிப்பட்டிருக்கின்றனர்.  உயிரும் இழந்திருக்கின்றனர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.  இத்தகைய பிரயாணம் செய்ய ஆசைப்படுபவர்கள் இள வயதிலேயே செல்வது தான் சரியானது.  உடலில் இளமையும் வலுவும் இருக்கும்போது செல்வதே சிறப்பானது. மேலும் இந்திய வழியில் சென்றால் ஆதி கைலாசத்திலிருந்து வரிசையாக எல்லாக் கோயில்களும் பார்க்கவும் முடியும்.  மருத்துவ வசதிகளோடு பாதுகாப்பான பிரயாணமும் உறுதியாகக் கிடைக்கும்.

 

ஆசிரியர் : கீதா சாம்பசிவம்

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

Click Link For Download : http://freetamilebooks.com/ebooks/om-namasivaya/

Murugan Padalgal

முருகன் பாடல்கள்

Murugan Paadalgal(2)
தமிழ்த் தெய்வம் முருகன் தன்னைப் பற்றி எழுதும் போதும் படிக்கும் போதும் உள்ளத்தில் வந்து நின்று விடும் எளிய தெய்வம். இன் தமிழில் எழுதுவது அவனுக்குச் செய்யும் நிவேதனம்.
எழுத வேண்டும் என்று எண்ணிய உடனே அவனே வந்து எழுதிக் கொள்வான் என்பதை உண்மையில் அனுபவித்தவர்கள் பலர் இருப்பர். எழுதியதைப் படிக்கும் அடியார்களின் அனுபவமும் உன்னதமே. இலக்கணம் பாராமல் என் வழியே அவன் எழுதிக் கொண்ட ஒரு சிறு தொகுப்பு தான் இங்கே அவனுடைய அடியார்களுக்காகத் தரப்பட்டுள்ளது.

ஆசிரியர் – ஸ்ரீதரன்  sudhadhar@yahoo.com

 

அட்டைப் படம் – மூலம் –http://www.flickr.com/photos/lingeswaran/8348700228/sizes/o/in/photolist-dHKgHo/

அட்டைப் படம் – வடிவமைப்பு – ப்ரியமுடன் வசந்த்

உரிமை – Creative commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International (CC BY-NC-SA 4.0)

 

மின்னூலாக்கம் – ஸ்ரீனிவாசன் tshrinivasan@gmail.com

Click Link For Download : http://freetamilebooks.com/ebooks/murugan-padalgal/

Upanayanam

உபநயனம்

upnayanam-cover

 

 

 

 

 

 

 

 

இன்றைய அவசர உலகில் சடங்குகள் யந்திரரீதியாகவே நடத்தப்படுகின்றன.  யாரும் அதன் முழுப் பொருளைப் புரிந்து கொண்டு அதன் தேவையை உணர்ந்து அதன் பெருமையையும், உள்ளார்ந்த பொருளையும் புரிந்து கொண்டு செய்வதில்லை.  மேலும் ஆண்களுக்குச் செய்யப்படும் உபநயனம் என்பதைப் பற்றிப் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.  இது குறிப்பிட்ட ஒரு சமூகமே குறிப்பாய் பிராமண சமூகமே இன்றளவும் கடைப்பிடிப்பதால் அவர்களுக்கு மட்டுமே உரித்தானது என்னும் தவறான கருத்தும் நிலவுகிறது.  நித்ய கர்ம அநுஷ்டானங்கள் அனைவருக்கும் பொதுவானவை. இதிலே பிராமணர் மற்ற சமூகம் என்ற பாகுபாடெல்லாம் இல்லை.  ஆனால் பிராமணர்களிலேயே பலருக்கும் இந்த உபநயனம் குறித்த முழு அறிவு இல்லை.  இதை ஒரு ஆடம்பரச் சடங்காக மாற்றியதோடு மட்டுமில்லாமல் ஆடம்பரமாகவும் நடத்திப் பெருமை கொள்கின்றனர்.  மேலும் உபநயனம் செய்து கொள்ளும் ஆண் குழந்தையின் வயதும் இக்காலங்களில் குறைந்த பக்ஷம் பதினைந்தாகிவிடுகிறது.

 

இன்னும் சில குடும்பங்களில் முதல் நாள் உபநயனம் பேருக்குப் பண்ணிவிட்டு மறுநாள் கல்யாணம் எனச் செய்வதையும் பார்க்க முடிகிறது. அப்படி எல்லாம் செய்யக் கூடாது என்பதோடு அதன் உண்மையான பொருளையும், அதன் தேவையையும், அது கொடுக்கும் மனக்கட்டுப்பாட்டையும் அதன் மூலம் மேம்படும் ஆன்மிக வாழ்க்கையையும் எடுத்துச் சொல்வதற்காகவே இந்தப் படைப்பு.  உபநயனம் ஏன் என்பதைக் குறித்துச் சிறு சிறு குறிப்புக்களாக அச்சிட்டு உபநயனங்கள் செய்யுமிடத்தில் விநியோகிக்கலாம். இதன் மூலம் உபநயனம் செய்வதன் காரண, காரியங்கள் புரிய வரும். மறைந்து வரும் நல்ல நல்ல கலாசாரங்களை மீண்டும் வழிமுறைப்படுத்தி நெறிப்படுத்துவதும்  இதன் முக்கிய நோக்கம். இன்றைய இளம்பெற்றோர் முதல் இளைஞர்கள் வரை படித்துப் பயனுறவேண்டும் என்பதும் இன்னொரு முக்கிய நோக்கம்.
தகவல்கள் உதவி:  தெய்வத்தின் குரல், திரு திவாஜி, திரு சே ஷாத்ரிநாத சாஸ்திரிகள்.

ஆசிரியர் : கீதா சாம்பசிவம்

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

Click Link For Download :  http://freetamilebooks.com/ebooks/upanayanam/

Thirumandhiram

திருமந்திரம் விளக்க உரையுடன் பாடல்கள் 1 – 150

cover

திருமந்திரம் என்னும் நூல், திருமூலரால் தமிழில் அருளப்பட்ட சிவஆகமம் ஆகும். சைவத் திருமுறைகளின் வரிசையில், திருமந்திரம் பத்தாவது திருமுறையாக வருகிறது. ஒன்பது தந்திரங்களாக வகுக்கப்பட்ட இந்நூல் மூவாயிரம் பாடல்களைக் கொண்டது.

திருமந்திரம் பக்திப் பிரபாவத்தில் ஆரம்பித்தாலும், அடுத்து உபதேசம், தத்துவம், யோகம், தியானம், சக்கரம், ஞானம் என்று பல விஷயங்களைப் பற்றி பேசுகிறது. திருமூலர் யோகப் பயிற்சி தரும் விதம் சுவாரசியமான நடை. அவை வெறும் சூத்திரங்களாக இல்லாமல், படிப்பவர்களுக்கு உற்சாகம் தரும் விதமாக அதன் பலன்களையும் சேர்த்தே சொல்கிறார். உதாரணத்திற்கு பிராணாயாமம் பற்றிய பாடல்களில், இதைச் செய்தால் மனம் லேசாகும், கள்ளில்லாமலேயே போதை உண்டாகும், துள்ளி நடக்கச் செய்யும் என்று ஒரு உத்வேகத்தை கலந்தே தருகிறார்.

வேதியர்கள் சத்தமாக மந்திரம் சொல்லும் விதத்தை மெலிதாக கிண்டல் செய்து உரையாசிரியர்களுக்கு தர்ம சங்கடத்தை உண்டாக்குகிறார் திருமூலர். சிவபுராணத்தில் சொல்லப்படும் தக்கன் வேள்வியைப் பற்றி அவர் சொல்வது, இப்போது உள்ள நவீன குருமார்கள் கூட தொடத் தயங்கும் விஷயம். தக்கன் வேள்வி எனச் சொல்லப்படுவது ஆண், பெண் உறவு என்கிறார் திருமூலர். அந்த உறவு சிவனை நினைத்து இருக்க வேண்டும் என்கிறது அவரது உபதேசம். இது பற்றி பேசுவதற்கு முன்னால் பிறர் மனையை பார்க்கக் கூடாது, பொது மகளிரிடம் செல்லக்கூடாது போன்ற இயமங்கள் உண்டு. தாம்பத்திய உறவு என்பது காமமில்லாமல் கடவுளை நினைத்து இருந்தால் அதுவும் ஒரு யோகமே என்பது திருமூலரின் உபதேசச் சுருக்கம்.

இந்த முதல் தொகுதியில் திருமந்திரத்தின் முதல் நூற்று ஐம்பது பாடல்கள், விளக்கவுரையுடன் உள்ளன. மிக உயர்ந்த விஷயங்களும், மறைபொருட்களும் கொண்ட ஒரு ஆகம நூலுக்கு உரை எழுதும் தகுதி எனக்கு இல்லை. திருமூலரின் பாடல்கள் தரும் வியப்பை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த மின்னூலின் நோக்கம், நண்பர்களிடையே திருமந்திரப் பாடல்களின் மேல் ஒரு ஆர்வத்தை தூண்டுவதே ஆகும். இதில் உள்ள விளக்கவுரைகள், பாடல்களை புரிந்து கொள்வதற்கான ஒரு சின்ன வழிகாட்டி மட்டுமே. நண்பர்கள் பாடல் புரிந்த பிறகு, விளக்கவுரையை விட்டு விட்டு பாடலை மட்டும் மீண்டும் படித்துப் பாருங்கள். உங்கள் வாழ்வு அனுபவத்திற்கும், ஆன்மிக ஈடுபாட்டிற்கும் ஏற்ப பல விஷயங்கள் புரிய வரும்.

 ரய்

முதல் மின்பதிப்பு ஏப்ரல் – 2014

அட்டைப்பட வடிவமைப்பு – ரய்

மின்னூல் ஆக்கம் – நரேன்

 

Click Link For Download : http://freetamilebooks.com/ebooks/thirumandhiram/