Nalliravum Kadalum Naanum

நள்ளிரவும் கடலும் நானும்

nalliravum-payon
ஆசிரியர் : பேயோன்
கவிதைகள்
வெகுஜன இலக்கியத்தில் கவிதைக்கான ஓர் வெற்றிடம் உள்ளது. சாதாரண இலக்கியத்தில் உரைநடையும் கவிதையும் இருப்பதற்கிணையாக வெகுஜன இலக்கியத்தில் உரைநடை உள்ளதே தவிர கவிதைக்கு இடமில்லாத நிலையே இருந்துவந்தது. பேயோனின் முந்தைய கவிதைத் தொகுப்பாகிய ‘காதல் இரவு’ இவ்வெற்றிடத்தினை ஓரளவு நிரப்பியது என்றே சொல்ல வேண்டும். எனினும் அதனை முழுவதுமாக நிரப்ப இன்னொரு தொகுப்பிற்கான தேவையிருந்தது. இத்தொகுப்பு அத்தேவையை நிறைவேற்றியுள்ளது.
கவிதை என்னும் வடிவம் உரைநடையின் “கஸின் பிரதர்” என்பது பேயோன் வாயிலிருந்து வருவதற்கே உரியதொரு கூற்றாகும். கவிதைக்குரிய நடையை அவரது கவிதைகளில் அரிதாகக் கண்டுவிட முடியும். கவிதையும் புனைவின் ஓர் உபவகை எனக் கூறும் இவர், உரைபுனைகளைப் போல் கவிதையிலும் குடும்பக் கவிதைகள், கிரைம், ஃபாண்டஸி, காதல் என வகையுருக்கள் (genre) இருக்க வேண்டும் என்று நம்புகிறார்.
சர்க்கரையைக் குறை என்றால்
ஒரேடியாகக் குறைத்துவிடுகிறாய்
என்ற வரிகளைக் கொண்ட ‘சாப்ளின் காபி’ எனும் கவிதை குடும்பக் கவிதை வகையுருவில் சேர்க்கப்பட வேண்டியது. வாழ்வின் இயக்கத்தில் மனிதனின் தனிமை, ஊருக்குப் போ, குழந்தைகளின் சுயநலம் போன்றவையும் இவ்வகைப்பட்டவை.
‘போலீஸ் கேஸ்’-யை கிரைம் கவிதையாகவும் ‘ஃபேஸ்புக் கவிதை’யை சைபர் கிரைம் கவிதையாகவும் வகைப்படுத்தலாம். யங் அடல்ட் எனப்படும் வாசக இனத்தாருக்காகக் காதல் கவிதைகள் பலவற்றை எழுதியிருக்கிறார். கவிஞருக்கு இயற்கையுடன் உள்ள காதல்-வெறுப்பு உறவைப் பனுவும் ‘ஐந்து நிமிட மழைக்கு’ போன்ற கவிதைகளை சுற்றுச்சூழல் பிரிவுக்கு உட்படுத்தலாம். ‘துன்பத்தின் பிம்பம்’, ‘கேலிச் சித்திரம்’, ‘பிரதிபலித்தல்’ போன்ற உருப்படிகளைத் தத்துவத் துறை படைப்புகளாகக் கொள்ள முடியும். வகைப்படுத்தப்பட முடியாத ‘என் வாட்ச்சு கொஞ்சம் ஸ்லோ’ மாதிரியான கவிதைகளும் உள்ளன. இவற்றை மொட்டையாக ‘பேயோன் கவிதைகள்’ என்றுதான் சொல்லியாக வேண்டும்.
பேயோனின் கவிதை அணுகுமுறை எனக்கு உவப்பானது. “கை வைத்தால் கவிதை” என்று அவர் அடிக்கடி சொல்வார். கவிதை எளிமையாக இருக்க வேண்டும் என்பார். படிமங்களை அடுக்குதல், கவிதையைப் பல அடுக்குகளைக் கொண்டிருப்பதாக ஆக்குதல் அல்லது மாற்றுதல் போன்றவற்றில் உடன்பாடுகள் ஏதுமற்ற மனிதர் பேயோன். இவருக்குக் கவிதை நன்றாக வருகிறது. இவர் தொடர்ந்து எழுத வேண்டும்.
லார்டு லபக்குதாஸ்
சென்னை – ஜனவரி, 2013

 

 

Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0  சர்வதேச உரிமத்தின் கீழ் பகிரப்படுகிறது.

Click Link For Download : http://freetamilebooks.com/ebooks/nalliravum-kadalum-naanum/

Rathi Veethi

ரதி வீதி

sss1ங்களுக்கு காதல் எந்த வடிவத்தில் இருந்தாலும் பிடிக்கும் என்றால் இப்பொழுதே வாசிக்க ஆரம்பியுங்கள் மாறாக காதல் என்றால் எழுத்து என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற இலக்கணம் உடையவர்களுக்கு இந்த மின்நூல் உகந்தது அல்ல . ஏனென்றால் இவை எழுதிப்பழகிக்கொண்டிருக்கும் ஒருவனின் சிதறல்கள் .இங்கே சிதறியிருப்பவை அனைத்தும் என் இதயக்கிடங்கிலிருந்து வார்த்தை வாளி வாயிலாக வாரியிறைத்தவையே . காதலால் பின்னிப்பிணைந்திருக்கும் இருவரின் உரையாடல்களாக இதைப்படிப்பீர்களானால் நிச்சயம் இம்மின்நூல் உங்களுக்கு புதிய உற்சாகம் தரும். இவற்றை வாசிக்கும் காதலர்களை, தம்பதியர்களை நிச்சயமாக இந்த மின்நூல் வசீகரிக்கும் . இம்மின்நூலைப்படிக்கும் பொழுது உங்கள் மனதில் தோன்றுபவைதான் இவற்றிற்க்கு அணிந்துரைகள் . மேலும் இவை பெரும்பாலும் என்னுடைய இணையதளத்தில் நான் எழுதியவற்றின் கோர்வையான பக்கங்களே. இம்மின்நூலை வாசித்துவிட்டு நிறையோ குறையோ உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

நன்றி
ப்ரியமுடன் வசந்த்
என்னுடைய இணைய தளம் :
www.priyamudanvasanth.com
என்னுடைய மின்னஞ்சல் :
vasanth1717@gmail.com
Copyright © 2014 by Creative Commons Attribution-Non Commercial-No Derivs 3.0 Unported License.

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

ரதிவீதி

ஆசிரியர் : ப்ரியமுடன்வசந்த்

மின்னூலாக்கம் : ப்ரியமுடன் வசந்த்

 பதிவிறக்க*

Click Link For Download : http://freetamilebooks.com/ebooks/rathi-veethi/

இந்தா-பிடி இன்னும் 50 கவிதை

இந்தா பிடி இன்னும் 50 (கவிதைகள்)

innum50cover

நூல்: இந்தா பிடி இன்னும் 50 (கவிதைகள்)

எழுதியவர்: பேயோன்

உரிமம்: Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International (CC BY-NC-ND 4.0)

***

Android கருவிகள் / iPhone / iPad / Chrome / Firefox / கணினியில் படிக்க

Click Link For Download : http://freetamilebooks.com/ebooks/இந்தா-பிடி-இன்னும்-50-கவிதை

Kadhal Pracharam

காதல் பிரசாரம்

 

Symbols-croped

 

காதல் பிரசாரம் – குறு நூல்

கவிஞர் கந்தசாமிக்குக் கவிதை என்றால் ரொம்பப் பிரியம். ஆனால் அவருக்கு வாய்த்தது, ஒரு செய்தித் தாளில் நிருபர் உத்தியோகம்.

தேர்தல் நேரத்தில் ஊரெல்லாம் சுற்றித் திரிந்து பிரசாரக் கூட்டங்களில் செய்தி சேகரித்தவர், மாலையில் வீடு திரும்பும் வழியில் காதலியைச் சந்திக்கிறார். அதே ஞாபகத்தில் வெண்பாக்களைப் பொழிகிறார்.

எலக்‌ஷன் ரிசல்ட் வருவதற்குள், அவருடைய காதலுக்குப் பச்சைக் கொடி காட்டப்படவேண்டும் என்று நீங்களும் பிரார்த்தனை செய்யுங்கள்!

என்றும் அன்புடன்,

என். சொக்கன்,

பெங்களூரு.

 

 

 

ஆசிரியர் – என். சொக்கன்

அட்டைப் படம் – வடிவமைப்பு – மின்னூலாக்கம் – என். சொக்கன்,

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.

Click Link For Download : http://freetamilebooks.com/ebooks/kadhal-pracharam/

Eruzhvali Short Stories Poems

எறுழ்வலியின் சிறுகதைகள் மற்றும் கவிதைகள்

Eruzhvali

 

பலராமன்

balaraman.l@gmail.com

http://balaraman.wordpress.com

 

அட்டைப் படம் – ராஜேஷ் (Twitter தளத்தில் @krajesh4u)

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

உரிமை : Creative commons Attribution 2.5 India

மின்னூலாக்கம் – பலராமன்

 

எறுழ்வலி எனும் பதிவில் பலராமன் எழுதிய சில சிறுகதைகளையும் கவிதைகளையும் தொகுத்து இந்த நூல் உருவாக்கப்பட்டது. நகைச்சுவை, காதல், அறிவியல் புனைவு போன்ற பல வகையான சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளது. கதை சொல்லும் விதமும், எழுத்து நடையும் ஒவ்வொரு சிறுகதையிலும் புதுமையாக இருக்கும் வண்ணம் எழுதப்பட்டிருக்கிறது. கவிதைகளிலும் புதிய முயற்சிகள் கையாளப்பட்டிருக்கிறது. அதுபோக, முடிந்தவரை பிறமொழிச் சொற்களைப் பயப்படுத்தாது தனித்தமிழ் மட்டுமே பயன்படுத்தப் பட்டுள்ளது. அவ்வளவாக கேள்விப்படாத தமிழ்ச் சொற்களுக்கு ஆங்காங்கே ஆங்கில விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த நூல் உங்கள் நேரத்தை சுவையுள்ளதாகவும் பயனுள்ளதாகவும் மாற்றும்.

Click Link For Download : http://freetamilebooks.com/ebooks/eruzhvali-short-stories-poems/

Valippokkan Stories

வலிப்போக்கனின் சமூகச் சிதறல்கள்

valippokkan

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

வணக்கம். பத்தோடு பதினொன்றாக இல்லாமல் பனிரெண்டாக இருந்து நான் படித்த,கேட்ட,பார்த்த சமூக அலவங்களையும் அந்த அவலகங்களினுடே நான் பட்ட இம்சைகளின் அனுபவங்களை கட்டுரைகளாக, கதைகளாக, கவிதைகளாக  இணையத்தில் “வலிப்போக்கன்” என்ற என்  பிளாக்கரில் என் அறிவு மட்டத்தில் எழுதி வந்ததில் சில நல்லவற்றை  மின்நூலாக கிரியேட்டீவ் காமன்ஸ்  உரிமையின் மூலமாக  திரு.த. சீனிவாசன் அவர்களால் இந்த குப்பையும் தங்களுக்கு படிக்க உதவும் என்ற நல்ல எண்ணத்தில் தொகுத்து ,வடிவமைத்து வெளியீட்டுள்ளார். இந்த மின் நூலுக்கான உழைப்பும் அந்த உழைப்பிற்க்கான உரிமையும் freetamilebooks.com குழுவைச்  சேரும்..
இவற்றை மெனக்கெட்டு படிப்பதும் படித்து முடித்தப்பின் தோன்றும் கருத்துகளில்  வாழ்த்துக்கள் என்றால் freetamilebooks.com குழுவைச் சேரும்… திட்டுகள்,மற்றும் வசவுகள் போன்றவைகள் எனக்கு மட்டுமே உரிமையானவை.. (உரிமையை விட்டுக் கொடுக்க முடியாதல்லவா)
வலிப்போக்கன்
அட்டைப் படம் – ப்ரியமுடன் வசந்த் – vasanth1717@gmail.com
அட்டைப்பட மூலம் –http://upload.wikimedia.org/wikipedia/commons/9/9b/Smilie_2.JPG
மின்னூலாக்கம் – ப்ரியா – priyacst@gmail.com

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

Creative Commons Attribution 4.0 International License.

Click Link For Download : http://freetamilebooks.com/ebooks/valippokkan-stories/

Mawnap Porum Punnagai Authayum

 • மௌனப் போரும் புன்னகை ஆயுதமும் – ஈழக் கவிதைகள்

  cover

  ஈழக் கவிதைகள்

  மே 17 2014 அன்று ஈழத்து யுத்தம் முடிந்து 5 வருடங்கள் நிறைவெய்துகிறது.
  இந்நூல் 2012 மே 17 அன்று கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் வெளியிடப்பட்டது.

  முஸ்டீன்

  simproduction2002@gmail.com

Keeranin Kavithai Keetrugal

கீரனின் கவிதைக் கீற்றுகள்

 

கவிதைகள்

பேரா. முனைவர் ப.அர. நக்கீரன்

prnakkeeran@yahoo.co.in

 

Creative Commons License

Valipokanin Kavithaighal

சமூகத்தின் வலிகளை பதிவிடும் வலிப்போக்கனின் கவிதைகள்

valipokaninKavithaikal

வலிப்போக்கன்

வலைத்தள முகவரி-.http://valipokken.blogspot.com
மின்னஞ்சல் : valipokken@gmail.com

அட்டைப் பட வடிவமைப்பு – மனோஜ் குமார்

மின்னஞ்சல் : socrates1857@gmail.com

மின்னூலாக்கம் – ஜெயேந்திரன்

மின்னஞ்சல் : vsr.jayendran@gmail.com

மின்னூல் வெளியீடு : சிவமுருகன் பெருமாள்

மின்னஞ்சல் : sivamurugan.perumal@gmail.com

உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.

அறிமுகம்

வணக்கம். பத்தோடு பதினொன்றாக இல்லாமல் பனிரெண்டாக இருந்து நான் படித்த,கேட்ட,பார்த்த சமூக அவலங்களையும் அந்த அவலகங்களினுடே நான் பட்ட இம்சைகளின் அனுபவங்களை கவிதைகளாக இணையத்தில் “வலிப்போக்கன்” என்ற என் பிளாக்கரில் என் அறிவு மட்டத்தில் எழுதி வந்ததை மின்நூலாக கிரியேட்டீவ் காமன்ஸ் உரிமையின் மூலமாக FreeTamilEbooks குழுவினரால் இந்த குப்பையும் தங்களுக்கு படிக்க உதவும் என்ற நல்ல எண்ணத்தில் தொகுத்து வடிவமைத்து வெளியீட்டுள்ளார். இந்த மின் நூலுக்கான உழைப்பும் அந்த உழைப்பிற்க்கான உரிமையும் FreeTamilEbooks குழுவினரையே சேரும்..

இவற்றை மெனக்கெட்டு படிப்பதும் படித்து முடித்தப்பின் தோன்றும் கருத்துகளில் வாழ்த்துக்கள் என்றால் FreeTamilEbooks குழுவினரையே சேரும்… திட்டுகள்,மற்றும் வசவுகள் போன்றவைகள் என்க்கு மட்டுமே உரிமையானவை..

Click Link For Download  : http://freetamilebooks.com/ebooks/valipokaninkavithaighal/

En Ammachiyin Kavithaigal

என் அம்மாச்சியின் கவிதைகள்

EAK1என் அம்மாச்சியின் கவிதைகள்

தேவி ஜகா

மின்னூல் வெளியீடு :http://FreeTamilEbooks.com

சென்னை