National Symbols Of India

இந்திய தேசியச் சின்னங்கள்

cover

ஏற்காடு இளங்கோ

 

உருவாக்கம்: ஏற்காடு இளங்கோ 

மின்னஞ்சல்:yercaudelango@gmail.com

மேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார்

மின்னஞ்சல்: socrates1857@gmail.com

மின்னூலாக்கம் : த.சீனிவாசன்

மின்னஞ்சல் : tshrinivasan@gmail.com

உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

 

Creative Commons License

 

நாடு என்றால் அதற்கு ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பும் எல்லையும் இருக்கும்.அதே போல் நாட்டிற்கு என்று ஒரு தனிக்கொடி,முத்திரை என்றும் இருக்கும்.ஒவ்வொருவரும் தங்கள் நாட்டின் கொடிக்கு தனி மரியாதை கொடுப்பார்கள்.கொடியை தங்களின் உயிரினும் மேலாகக் கருதி அதனைபாதுகாப்பார்கள்.கொடிக்கு தனி மரியாதைசெலுத்துவார்கள்.கொடியும்,முத்திரைகளும் பண்டைய ராஜாக்கள்காலத்திலிருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.

துணியில் ஆனக் கொடியை உலகிற்கு அறிமுகம் செய்தவர்கள்ரோமானியர்கள் ஆவர்.கி.பி.1218 ஆம் ஆண்டில் ஒரு கொடியை உருவாக்கிஅதை தேசியச் சின்னமாக உலகத்திற்கு அறிமுகப்படுத்திய நாடுடென்மார்க்.அதன் பிறகே உலகின் அனைத்து சுதந்திரம் பெற்ற நாடுகள்தங்களுக்கு என்று தேசியக் கொடியை உருவாக்கிக் கொண்டனர்.

இந்திய நாட்டிற்கு என்று தேசியக் கொடி உள்ளது.அதுதவிர தேசிய பாடல்,தேசியகீதம் ,முத்திரை காலண்டர் என பல சின்னங்கள் உள்ளன.தேர்வுசெய்யப்பட்ட சின்னங்கள் யாவும் மிகவும் கவனத்துடனே தேர்வுசெய்யப்பட்டுள்ளன.ஒவ்வொரு சின்னத்திற்கும் ஒரு தனிச்சிறப்புஉண்டு.அதனைப் பற்றிய தகவல்களை இப்புத்தகத்தில் காணலாம்.

இப்புத்தகத்தை எழுதுவதற்கு எனக்கு ஒத்துழைப்பு கொடுத்த என் மனைவிதிருமிகு..தில்லைக்கரசி அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.இந்தப் புத்தகத்தைச் செழுமைப்படுத்திக் கொடுத்தஓய்வுபெற்ற ஆசிரியர் திருமிகு.செ.நமசிவாயம் அவர்களுக்கும்,தட்டச்சுசெய்துகொடுத்த திருமிகு .பெ.சாம்சுரேஷ் அவர்களுக்கும் எனது நன்றி.இந்தப்புத்தகத்தை மின்னூலாக வெளியிட்ட  குழுவினருக்குமனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வாழ்த்துகளுடன்,

~ஏற்காடு இளங்கோ

Click Link For Download : http://freetamilebooks.com/ebooks/national-symbols-of-india/

Glimpses Of Internet Technologies

இணைய தொழில்நுட்பங்கள் – ஒரு முன்னோட்டம்

IT1

இணைய தொழில்நுட்பங்கள் – ஒரு முன்னோட்டம்

ரவி நடராஜன்

 

இணைய தொழில்நுட்பங்கள் – ஒரு முன்னோட்டம்

உருவாக்கம்: ரவி நடராஜன்

மின்னஞ்சல்:  ravinat@gmail.com

மேலட்டை உருவாக்கம்: லெனின் குருசாமி

மின்னஞ்சல்: guruleninn@gmail.com

மின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள்

மின்னஞ்சல் : sivamurugan.perumal@gmail.com

உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

 

சொல்வனம்’ இதழில் 2009 மற்றும் 2010 –ல் எழுதிய இணையம் சம்மந்தப்பட்ட கட்டுரை தொகுப்பு, இப்புத்தகம். இணையத்தைப் பற்றிச் சரியாக புரிந்து கொள்ளாமல், அதை பயன்படுத்துவர்கள் பலர். அனைவரும் தொழில்நுட்ப வல்லுனர்களாக இருக்க வேண்டியதில்லை என்பதே இணையத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். ஆயினும், பயன் படுத்தும் நுட்பங்களை அறிந்தால், தகுந்த வகையில் பயன்படுத்துவதோடு,இணையத்தில் ஏமாறாமல் இருப்பதும் சாத்தியம். தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் இந்தியாவில்தான், இணைய மோசடிகளால், பலரும் பேராசையினால் தங்களுடைய பணத்தை இழக்கவும் செய்கிறார்கள். முதல் இரண்டு கட்டுரைகள், உங்களுடைய அந்தரங்கம் எவ்வளவு முக்கியமானது மற்றும் அதை எப்படி எல்லாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை விளக்கும் கட்டுரைகள்.

அடுத்த மூன்று கட்டுரைகள் இணையம் எப்படி அச்சுத் தொழிலுக்குச் சவாலாகப் பல தொழில்நுட்பங்களைக் கொண்டு வந்துள்ளது என்பதை விவரிக்கும் கட்டுரைகள். உதாரணத்திற்கு, இக்கட்டுரைகளை வெளியிட்ட ‘சொல்வனம்’ பத்திரிகை இத்தகைய தொழில்நுட்பத்தால் உருவானது.மேலும் இன்று நீங்கள் இந்த மின்னூலைப் படிப்பதும் இந்த தொழில்நுட்ப வளர்ச்சியினால் என்றால் மிகையாகாது. பெட்டிக்கடையில் வாங்கினால்தான் புத்தகம் என்ற காலம் போய்விட்டது. இணையத்தில் படிக்க ஆசை இருப்பவர்களுக்கு அவர்களது சுவைக்கேற்ப பரிமாறப் பல தளங்கள் உள்ளன.

இந்தக் கட்டுரைகளை வெளியிட்ட ‘சொல்வனம்’ ஆசிரியர் குழுவிற்கு என் மனமார்ந்த நன்றி.

ரவி நடராஜன்

Click Link For Download : http://freetamilebooks.com/ebooks/glimpses-of-internet-technologies/

Women As Seen By Religions

மதங்களின் பார்வையில் பெண்கள்

15216926828_40fce5a7df_o2

B.E. ஜார்ஜ் டிமிட்ரோவ்

சென்னை

 

 

மதங்களின் பார்வையில் பெண்கள்

 

B.E. ஜார்ஜ் டிமிட்ரோவ்

george1sasy@gmail.com

 

அட்டைப் பட மூலம் – மனோஜ் குமார்

அட்டைப் பட வடிவமைப்பு – மனோஜ் குமார்

மின்னஞ்சல்: socrates1857@gmail.com

மின்னூலாக்கம் – ஜெயேந்திரன்  – vsr.jayendran@gmail.com

உரிமை – creative commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International.

அணிந்துரை

தோழர் ஜார்ஜ் டிமிட்ரோவ், மதங்களின் பார்வையில் பெண்கள் என்ற சிறு நூலை எழுதியிருப்பது ஒரு நல்ல முயற்சி. பாலின சமத்துவ பார்வையுடன் விவரங்களை ஆய்வு செய்ய பிரயத்தனம் செய்துள்ளார். இளைஞர்களின் ஒரு பகுதி உலகம் ரசிகர் மன்றங்களாகவும், ஒரு பகுதி உலகம் காசு, பணம், துட்டு, மணி, மணி என்றும், ஒரு பகுதி உலகம் சமூக விரோத நடவடிக்கைகளாகவும், ஒரு பகுதி உலகம் எதிர்காலம் குறித்த நம்பிக்கையின்மையுடனும் இயங்கிக் கொண்டிருக்கும் சூழலில், சமூக பிரக்ஞையோடு, சமுதாய மாற்றத்தோடு தொடர்புடைய இந்த நடவடிக்கையில் ஜார்ஜ் ஈடுபட்டது பாராட்டுக்குரியது. இதற்கான பின்புலமாக மார்க்சிய இயக்கமும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் இருப்பதுதான் உண்மை.

இந்த முயற்சியில், ஜார்ஜ் டிமிட்ரோவ் வரலாறை சற்று அலசிப் பார்த்திருக்கிறார். சில நூல்களைப் படித்து விவரம் சேகரித்திருக்கிறார். இதுவரை எழுதப்பட்ட வரலாறு உண்மையில் வர்க்கப் போராட்டங்களின் வரலாறுதான். ஆனால், அது அவன் கதையாக (History – His Story) மட்டும் இல்லாமல், அவள் கதையாகவும் (Her Story) இருக்கவேண்டும் என்பது முக்கியமானது. தோழர் லெனின், கிளாரா ஜெட்கின் போன்ற புரட்சியாளர்கள் இந்த அம்சத்தைத் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளனர். எந்த மதத்துக்கும் பாலின நிகர்நிலை பார்வை இருப்பதாகக் கூற முடியாது. சமூகக் கண்ணோட்டத்தைப் போலவே, மதங்களின் கண்ணோட்டத்திலும் பெண்கள் ஒரு மாற்று குறைந்தவர்கள்தான். இந்து மதக் கோட்பாடு சட்டம் கொண்டுவரப்படுவதற்கே 4 ஆண்டுகள் நாடாளுமன்றம் படாத பாடு பட்டது. 1951ல் முன்மொழியப்பட்ட மசோதா 1955ல் தான் சட்டமானது. அக்கால கட்டத்தில் இன்றைய இந்துத்வவாதிகளின் முன்னோடிகள், இம்மசோதாவை சட்டமாக்க விடாமல் பகீரத முயற்சிகளில் ஈடுபட்டார்கள். சொத்து கிடைத்தால் பெண்கள் கெட்டழிந்து விடுவார்கள் என்பது போன்ற அபத்தமான வாதங்கள் முன்வைக்கப்பட்டன. ஆண் வாரிசுதான் கொள்ளி வைக்க முடியும், எனவே அதற்காகப் பலதார மணம் தேவை என்றும் வாதிக்கப்பட்டது. மொத்தத்தில் திருமணம், விவாகரத்து, சொத்துரிமை போன்ற அம்சங்களில் சீர்திருத்தம் செய்யும் நோக்கத்துடன் வந்த இந்து கோட்பாட்டு மசோதாவினால், இந்து சமுதாயத்தைத் தூக்கி நிறுத்தும் அனைத்துத் தூண்களும் ஆட்டம் கண்டு விட்டன என்று பதறினார்கள். இதற்கிடையே, குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், இதற்கு ஒப்புதல் அளிக்கமாட்டார் என்ற சூழலும் ஏற்பட்டது. இதனால் மனம் வெறுத்த டாக்டர் அம்பேத்கர், சட்ட அமைச்சர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தார் என்பதெல்லாம் பதிவு செய்யப்பட்ட வரலாறு. குழந்தைத் திருமணம், சதி, தேவதாசிமுறை போன்ற சமூக அவலங்கள் மதத்தின் பெயரால் இன்னும் நியாயப்படுத்தப்படுகின்றன. மனுதர்மம், பெண்களைப் பொறுத்தவரை, அதர்மமாக இருப்பதும் நமக்குத் தெரியும்.

ஆதாமின் விலா எலும்பிலிருந்தே ஏவாள் உருவாக்கப்பட்டாள் என்னும்போதே, கிறித்தவ மதம் ஆணுக்கு உட்பட்டவளாகத்தான் பெண்ணைப் பார்க்கிறது என்பது தெளிவாகி விடுகிறது. கிறித்தவ தனிநபர் சட்டங்கள் (Personal Law) விவாகரத்து, சொத்துரிமை போன்ற விவகாரங்களில் பெண்ணைப் பாகுபடுத்தியே பார்க்கின்றன. இசுலாமிய தனிநபர் சட்டங்களும் திருமணம், விவாகரத்து, சொத்துரிமை, ஜீவனாம்சம் உள்ளிட்ட விஷயங்களில் பெண்ணுக்கு சம அந்தஸ்து அளிக்கவில்லை. மேரி ராய், ஷாபானு வழக்குகள் இவற்றுக்கு உதாரணம். இசுலாமிய சட்டங்கள் ஸ்தல மதகுருமார்களின் புரிதலுக்கு விடப்படாமல், தெளிவாக வரையறுக்கப்படவேண்டும் என்பதே இந்தியாவில் இசுலாமிய பெண்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. திருச்சபைகளிலும், ஜமாத்துகளிலும் பெண்களுக்குப் பிரதிநிதித்துவம் இல்லை. இவற்றுக்கான கோரிக்கைகளும் வலுத்து வருகின்றன.

மதமும் பெண்களும் குறித்த பல அம்சங்கள் விரிவாகவோ, சுருக்கமாகவோ இதில் இடம் பெற்றுள்ளன. அதேசமயம் ஆதிகாலத்தில் புராதன பொதுவுடமை சமூக அமைப்பில், பெண்கள் உயர்நிலையில் இருந்தது குறித்த பகுதி வலுப்படுத்தப்பட வேண்டும். பெண்ணின் உயர்ந்த அந்தஸ்துக்குக் காரணமாக, அவளது மறு உற்பத்தித் திறன் (Reproduction) தான் பொதுவாக முன் வைக்கப்படும். அதுமட்டும் காரணமல்ல. அன்றைய (பொருள்) உற்பத்தி முறையில் (Production) பெண் மையப் பங்கை வகித்தாள் என்பதும் முக்கிய காரணம்.

இன்றைய நவீன தாராளமய காலத்தில், எல்லாமே மார்க்கெட்டாகிறது. பக்தியும் கூடத்தான்! கடவுள் சந்தை (God Market) என்பது உருவாக்கப்பட்டிருக்கிறது. சடங்கு, சம்பிரதாயம், பூஜை, புனஸ்காரம், சாமியார்கள், ஆசிரமம் இவற்றுக்கான சந்தை உத்தி (Marketing strategy), விளம்பரங்கள், நிறுவனங்கள் என்று வலை விரிகிறது. மறுபக்கம், மதத்தைப் பயன்படுத்தி மக்களைப் பிரிக்கும் அரசியலும் நடந்துகொண்டிருக்கிறது. இதற்கு மத்தியில் மதத்தைப் பற்றிய ஒவ்வொரு சிறு அலசலும் நிச்சயம் ஒரு உரைகல்லாக உருவெடுக்கும். அதுவும், சமுதாயத்தில் சரிபாதியான பெண்கள் குறித்த மதங்களின் பார்வை அனைவரும் விமர்சனரீதியாக சிந்திக்க வேண்டிய அம்சம்.

ஜார்ஜ் டிமிட்ரோவ் அவர்களின் முயற்சிக்கு மீண்டும் வாழ்த்துகளும், பாராட்டுதல்களும்!

 

உ.வாசுகி
அகில இந்திய துணைத் தலைவர்,
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்.

Click Link For Download :http://freetamilebooks.com/ebooks/women-as-seen-by-religions/

 

Katru Mazhai Veyil Velicham

காற்று மழை வெயில் வெளிச்சம் – கடிதங்கள்

முருகானந்தம் ராமசாமி மற்றும் அன்பரசு சண்முகம்15210182843_59345e049e_z

சென்னை

 

 

உருவாக்கம்: முருகானந்தம் ராமசாமி மற்றும் அன்பரசு சண்முகம்

மின்னஞ்சல்:arasukarthick@gmail.com &rmurukanantham25@gmail.com

தொகுப்பாசிரியர்: அரசமார்

மேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார்

மின்னஞ்சல்: socrates1857@gmail.com

மின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள்

மின்னஞ்சல் : sivamurugan.perumal@gmail.com

உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

 

முன்னுரை

முருகானந்தம் ராமசாமி எளிய விவசாயி மற்றும் இலக்கிய வாசகருக்கும், மெல்ல இலக்கியங்கள் வாசிக்கத் தொடங்கும் நண்பரான அன்பரசு சண்முகத்திற்கும் இடையிலான கடிதங்கள் குடும்பம், சமூகம் ஆகியவற்றின் வழியே இலக்கியங்களைப் பற்றிய அனுபவப் பகிர்தலை நிகழ்த்துகிறது. சாதாரண கடிதங்களைப்போலில்லாது, தனித்துவமான இலக்கியப்பகிர்வை நிகழ்த்துகின்ற எழுத்துக்களை நாம் இதில் காணமுடிகிறது. இருவரும் ஒருவரையொருவர் முழுக்க அடையாளம் கண்டுகொண்டதே கடிதங்களில்தான் என்பதை, இருவரின் வார்த்தைகளிலிருந்தே கண்டு கொள்ள முடியும். கடிதங்கள் எழுதுவது என்பது குறைந்துவிட்ட காலத்தில் இது போன்ற கடிதங்கள் உறவின் வெம்மையை உள்ளங்கையில் உணர்த்துகிறது. இதனை இருவரின் நண்பரான அரசமார் நேர்த்தியாக தொகுத்தளித்திருக்கிறார்.

இந்நூலினை அனைவரும் தரவிறக்கி படிக்கலாம், யாருடனும் பகிரலாம். நன்றி.
நூல் பற்றிய விமர்சனங்களை, கருத்துக்களை அனுப்ப,

அன்பரசு, 57,கிளுவன்காடு, வடக்குப்புதுப்பாளையம்(அ), ஊஞ்சலூர்(வழி), ஈரோடு-638152
இரா.முருகானந்தம், 130, தொப்பம்பட்டி(அ), தாராபுரம், திருப்பூர் – 638657

என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கலாம்.

பதிவிறக்க*

Click Link For Download : http://freetamilebooks.com/ebooks/katru-mazhai-veyil-velicham/

Live With Fear

பயத்தோடு வாழப் பழகிக் கொள்

bayam-cover

ஜோதிஜி திருப்பூர்

சென்னை

பயத்தோடு வாழப் பழகிக் கொள்

உருவாக்கம்: ஜோதிஜி திருப்பூர்

மின்னஞ்சல் – powerjothig@yahoo.com

 

எல்லாக் கருத்துக்களும் நூல் ஆசிரியருடையவையே.

உரிமை Creative Commons Attribution-Non Commercial-No Derives 3.0 Un ported License

மேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார்

மின்னஞ்சல்: socrates1857@gmail.com

 

மின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள்

மின்னஞ்சல் : sivamurugan.perumal@gmail.com

மின்னூல் வெளியீடு: த.ஸ்ரீனிவாசன்

மின்னஞ்சல் : tshrinivasan@gmail.com

உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

என்னுரை

தேவியர் இல்லம் திருப்பூர் http://texlords.wordpress.com/என்ற பெயரில்வேர்ட்ப்ரஸ் ல் 2009 ஜுலை மாதம் எழுதத் தொடங்கினேன . கடந்த நான்குஆண்டுகளாக ப்ளாக்கரில் தேவியர் இல்லம் http://deviyar-illam.blogspot.com/என்ற பெயரில் எழுதி வருகின்றேன் .

அனுபவம் , செய்திகள் , கட்டுரை , சமூகம் , பயணக்கட்டுரை , ஆன்மீகம் ,நெடுங்கதை , தமிழ்நாட்டு அரசியல் , இந்திய அரசியல் , சர்வதேச அரசியல் ,ஈழம் சார ்ந்த வரலாறு , தமிழர் வரலாறு , குழந்தைகள் குறித்த தொடர்நினைவலைகள் என்று அனைத்து தரப்பு விசயங்களையும் எனக்குத் தெரிந்தமொழியில் எழுதி வந்துள்ளேன் .

2013 ஆம் ஆண்டு என் முதல் புத்தகம் வெளியானது . 4 தமிழ் மீடியாவெளியிட்டார்கள் . அந்தப் புத்தகத்தின் பெயர் டாலர் நக ரம் . திருப்பூர்வாழ்வியல் குறித்து அலசும் அனுபவத் தொடர் சார்ந்த கட்டுரைகளின்தொகுப்பு . இந்தப் புத்தகம் தமிழின் முக்கிய இதழான ஆனந்த விகடன்வருடந்தோறும் அவர்கள் வெளியிடும் இயர்புக்கில் 2013 ஆம் ஆண்டின்சிறந்த பத்து புத்தகங்களில் ஒன்றாக தேர்ந்து எடுத்தார்கள் . அடுத்து கல்விகுறித்து எழுதப்பட்ட கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு புத்தக வடிவில் வரகாத்துக் கொண்டிருக்கின்றது .

அமெரிக்காவில் இருந்து வெளி வந்து கொண்டிருக்கும் வலைத்தமிழ்இணைய பத்திரிக்கையில் “ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்” என்றதொடர் வாரந்தோறும் (2014) வெள ்ளிக்கிழமை அன்று திருப்பூர்தொழிலாளர்களைப் பற்றி அலசும் வாழ்வியல் தொடராக கடந்த 19வாரங்களாக வந்து கொண்டிருக்கின்றது . இதுவும் புத்தமாக மாறவாய்ப்புண்டு .

கடந்த 2014 நவம்பர் வரைக்கும் நான் எழுதிய தலைப்புகளின் எண்ணிக்கை682, வந்த விமர்சனங்களின் எண்ணிக்கை 11,500. தேவியர் இல்லம்வலைபதிவை பார்வையிட்ட பார்வையாளர்கள் படித்த பக்கங்களின்எண்ணிக்கை 10 லட்சம் .

கடந்த இருபது வருடங்களாக திருப்பூரில் ஆய்த்த ஆடை ஏற்றுமதிதுறையில் பணியாற்றி கடந்த ஐந்தாண்டுகளாக ஒரு நிறுவனத்தில் பொதுமேலாளராக (GENERAL MANAGER) உற்பத்தித் துறை யில்பணியாற்றிவருகின்றேன் .

மனைவி பெயர் மாதவி . இளங்கலை வணிகவியல் பட்டதாரி . எனக்குதோழியாக , என் எழுத்துக்கு வாசகியாக குடும்பத்தின் இல்லத்தரசியாகஇருக்கின்றார் . எங்கள் இரட்டைக்குழந்தைகளின் பெயர் தர்ஷிணி , துர்க்காதேவி , கடைக்குட்டியின் பெயர் சங்கரி தேவி . முறைய ஆறாம் வகுப்புஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கின்றார்கள் . குழந்தைகள் மூவருக்கும்என் எழுத்து , இணையத்தில் செயல்பட்டுக் கொண்டிருப்பது , நான்எதைக்குறித்து எழுதுகின்றேன் போன்ற அனைத்து விபரங்களும் மிகநன்றாகவே தெரியும் .

மூவரும் என்னை எழுத்தாளன் என்று என ்னை ஒப்புக்கொள்ளவில்லை .காரணம் அவர்கள் கணினி பயன்படுத்தும் நேரத்தை நான் கடன் கேட்பதேஅவர்களுக்குண்டான பிரச்சனை . மூவரில் இருவருடன் சமூகத்தைப் பற்றிஇங்குள்ள அரசியல் அவலத்தைப் பற்றி அலசி ஆராய்வதே என் பொழுதுபோக்குகளில் ஒன்று . அந்த அளவுக்கு அவர்களை சக நண்பர்க ளாகமாற்றுவதில் வெற்றி அடைந்துள்ளேன் . எப்போது போல என் மனைவிஅவள் சின்னவட்டத்தை வெளியே வராமல் இன்னமும் அடம் பிடித்துக்கொண்டிருக்க குழந்தைகள் மூவருடனும் சேர்ந்து அவரை கலாய்ப்பதேஎங்களின் முக்கிய பொழுது போக்காக உள்ளது .

நான் வாழ்ந்து வந்த வாழ்க்கை , நான் வாழ்ந ்து கொண்டிருக்கும் வாழ்க்கை ,இதன் வழியே நான் பார்த்த சமூகம் இதன் மூலமாக பெற்ற பாடங்கள் , நான்பெற்ற தாக்கம் மற்றும் நான் உணர்ந்து கொண்டவைகளை இங்கேகட்டுரைகளாக “பயத்தோடு வாழப் பழகிக் கொள்” என்ற பெயரில் உங்களுக்குதொகுத்து கொடுத்துள்ளேன் . ஒவ்வொரு கட்டுரைக்கும் கீழே நான் எழுதியதேதியை குறிப்பிட்டு உள்ளேன் . அதன் மூலம் அந்த சம்பவம் நடந்தகாலத்தை உங்களால் ஒப்பிட்டுக் கொள்ள முடியும் .

இதில் உள்ள ஒவ்வொரு கட்டுரைகளிலும் நீங்களும் வாழ்ந்து இருக்கக்கூடும். சமூகம் சார்ந்த கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய பிரச்சனைகள்அனைத்தும் உங்கள் வாழ்க்கையோடு மட்டுமல்ல உங்கள் தலைமுறையின்வாழ்க்கையையும் பாதிக்கக்கூடிய அம்சமாகும் .

நடுத்தரவர்க்கத்தின் அங்கத்தினரான நாம் ஏதோ ஒன்றுக்காக பயந்துதினந்தோறும் நம் இருப்பை காப்பாற்றிக் கொள்ளத்தான் போராடிக்கொண்டே இருக்கின்றோம் . எத்தனை சமூகம சார்ந்த பிரச்சனைகள்நம்மைச் சுற்றி நடந்தாலும் நமக்கு அது நடக்கும் வரையிலும் நாம்அனைத்தையும் செய்திகளாகவே பார்த்து பழகி விட்டோம் . இது தான் நம்வாழ்க்கையின் எதார்த்தம் .

உணர்ந்து படியுங்கள் . உங்கள் உள்ளத்தில் தோன்றும் எண்ணங்களைமறக்காமல் எனக்குத் தெரியப்ப டுத்துங்கள் .

நட்புடன்

ஜோதிஜி திருப்பூர் .

Click Link For Download : http://freetamilebooks.com/ebooks/live-with-fear/

Ulaviyal

உளவியல் உங்களுக்காக!

ulaviayal

உருவாக்கம்: இராம. கார்த்திக் லெட்சுமணன்

மின்னஞ்சல் –karthik.psychologist@ymail.com

வகை – கட்டுரை

எல்லாக் கருத்துக்களும் நூல் ஆசிரியருடையவையே.

உரிமை Creative Commons Attribution-ShareAlike 4.0 International License

மேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார்

மின்னஞ்சல்: socrates1857@gmail.com

மின்னூலாக்கம் : குனு அன்வர்

மின்னஞ்சல் : gnukick@gmail.com

மின்னூல் வெளியீடு: சிவமுருகன் பெருமாள்

மின்னஞ்சல் : sivamurugan.perumal@gmail.com

 

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

என்னுரை

உளவியல் உங்களுக்காக!” என்று தலைப்பிடப்பட்டிருக்கும் இந்தப் புத்தகம் உளவியல் தொடர்பான 16 கட்டுரைகளை உள்ளடக்கியது. இந்தக் கட்டுரைகள் இன் அன்ட் அவுட் சென்னை என்ற மின்னிதழில் பல்வேறு வாரங்களில் வெளியிடப்பட்டவை.

இதனை ஒரு புத்தகமாக வெளியிட யோசனை தந்த நண்பர் திரு. அன்வர் அவர்களுக்கும், இன் அன் அவுட் சென்னை மின்னிதழின் பதிப்பாசிரியர் திரு.விஜய குமார் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

இந்தக் கட்டுரைகள் படிப்பவர்களுக்கு பயனுள்ளவைகளாய் இருக்கும் என்று உறுதியாய் நம்புகிறேன். படித்த பின் உங்கள் கருத்துக்களை என் மின்னஞ்சல் முகவரிக்கு (karthik.psychologist@ymail.com) அனுப்புமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

என்றும் உங்கள்,

இராம. கார்த்திக் லெட்சுமணன்.

karthik.psychologist@ymail.com

Click Link For Download : http://freetamilebooks.com/ebooks/ulaviyal/

Streetlight

தெருவிளக்கு

அன்பு நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த நூலைப்பற்றிச்சொல்ல நூலின் தலைப்பே போதுமானது. புதிதாக என்ன streetlightகூறிவிட முடியும். தெருவிளக்குகள் போல தன் வாழ்க்கையின் பல்வேறு துயர்களுக்கிடையே தன்னால் முடிந்த விஷயங்களை சிந்திப்பதோடு அல்லாமல் அதை செயல்படுத்த முயற்சிக்கும் தன்னை எரித்தேனும் சிறிது இருளையாவது போக்க முயலுமா என்று முயற்சிக்கும் உண்மையான தூய ஆத்மாக்கள் இவர்கள்.

இந்நூலிற்கான கட்டுரைகளை ஆக்கத்தலைமையாளர்  தேர்ந்தெடுத்தார். இவற்றை அவர் உட்பட பலரும் மொழிபெயர்த்துள்ளோம். மனிதர்கள் மேல் அன்புகொண்ட, மனித வாழ்க்கை மேல் அக்கறையும், ஆதுரமும் கொண்ட இக்கட்டுரையிலுள்ள அந்த மனிதர்களின் செயல்களைத்தான் நாம் கவனம் செலுத்திப்பார்க்க வேண்டும். இந்தக்கட்டுரைகள் தொடர்ச்சியாக வெளியிட்ட கோமாளி மேடை வலைப்பூ  நண்பர்களுக்கு என்றும் எங்களன்பு.

வாசியுங்கள்.நன்றி!

அன்பார்ந்த   வாழ்த்துக்களுடன்,

வின்சென்ட் காபோ

                                                                                                                                                ஜோ ஃபாக்ஸ்

பதிப்பாளர் உரை

இந்த நூலிற்கான மொழிபெயர்ப்பினை பல்வேறு சூழ்நிலைகளில் செய்யவேண்டி இருந்தது. அதனால் சில கட்டுரைகளில் அது எங்கிருந்து எடுத்து பயன்படுத்தப்பட்டது என்ற நாளிதழின் தேதி இல்லாமல் போய்விட்டது. பிழை பொறுத்துக்கொள்ளுங்கள். அடுத்தமுறை சரியாக இருக்க முயற்சிக்கிறோம். இந்த கட்டுரைகளுக்கான விதை 2008ல் வெளிவந்த இந்தியா டுடேவின் மாற்றத்தின் முன்னோடி என்ற இதழிலிருந்துதான் தொடங்குகிறது. அந்த மனிதர்களின் செயல்பாடுகளைப்போல உழைக்கும் பலரையும் அறிமுகப்படுத்த முயலும் எளிய முயற்சிதான் இது.

இதற்கான  ஊக்கத்தை தந்த திரு. இரா .முருகானந்தம்,  எழுத்தாளர் ஸ்ரீராம், அறச்சலூர் ப்ரகாஷ் பொன்னுசாமி, வெள்ளோடு மெய்யருள், மரு. வெ. ஜீவானந்தம்,  செபியா நந்தகுமார், ஃப்ரீ தமிழ் இபுக்ஸ் இணையதள நண்பர் சீனிவாசன் அவர்களின் தலைமையிலான குழு மற்றும் இதற்கான தொடக்கத்தை  ஏற்படுத்தி தந்த  சிவராஜ் அவர்களையும் மறக்க முடியாது.

மனிதன் என்பவன் தீமையும், வன்முறையும் கொண்டவன் என நான் நம்பவில்லை. மாற்றத்திற்கான விஷயங்கள் அவ்வளவு எளிதில் நமது சமூகத்தில் நடைபெற வாய்ப்பில்லை; என்றாலும் அதற்கான எந்த முயற்சிகளும் இன்றுவரை தொய்வடையவில்லை. இதற்கான கட்டுரைகள் எழுதிய செய்தியாளர்களுக்கு நன்றி என்ற ஒரு சொல் போதாது. அவர்களின் பெயர்கள் கட்டுரையில் தக்க மரியாதையுடன் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.  எந்த நாளிதழின் கட்டுரைகள் பயன்படுத்தப்பட்டதோ அந்த பத்திரிகைகளின் பெயர்கள் கட்டுரைகளின் கீழே குறிப்பிடப்பட்டிருக்கின்றன.  நன்றி!

ப்ரியங்களுடன்

அன்பரசு சண்முகம்

நூல் அறிமுக உரை

இந்நூலில் மொத்தம் பதினெட்டு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இக்கட்டுரைகள் எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன என்றால் சமூகத்திற்கான தனிமனித பங்களிப்பு என்ற வகையில் உள்ளது. தனி மனித பொருளாதாரம், குடும்பம் என்று பல சுழல்காற்றுகளிடையே இந்த பதினெட்டு கட்டுரைகளிலும் உள்ள மனிதர்கள் தங்கள் மனதின் உள்ளொளியை அணையவிடவில்லை. சமூகத்திற்கு பயன்படும் வகையில் பல பொருட்களை உருவாக்கியிருக்கிறார்கள். இவை அனைத்தும் சுயமான அகத்தூண்டுதலினால் நிகழ்ந்துள்ளன என்பதை கருத்தில் கொள்ள வேண்டி உள்ளது.

 

தனக்கு ஏற்படும் ஒரு பிரச்சனைக்கான தீர்வாக ஒன்றைத் தேடும்போது பலரும் அதே பிரச்சனைக்கான தீர்வுகளைத் தேடி அலைந்துகொண்டிருப்பது கண்டு நிலைமையைப் புரிந்துகொண்டு  தான் கண்டுபிடித்த பொருளை சமூகத்திற்கானதாக மாற்றுகிறார்கள். இப்படித்தான் சாதாரண மனிதன் சமூகத்தைப் புரிந்துகொண்டு செயலாற்ற முடியும். எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் இதுபோன்ற மனிதர்கள் ஒரு பார்வையில் தன்னையொத்த மனிதர்களுடன், ஆத்மாக்களுடன் இணைந்துவிடுவார்கள்.

 

வீடு என்ற பாதுகாப்பான இடத்திலிருந்து வெளிவந்த பின்தான் தெருவில் விளக்கு இல்லாதது, வெளிச்சம் இல்லாதது நமக்கு நினைவு வருகிறது. இவர்கள் தங்களின் வாழ்வையே பலரது ஏளனத்திற்கும், கிண்டலுக்கும், நக்கல் சிரிப்புக்கும் பணயமாக வைத்து இன்றும் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இறுதிக்கட்டுரையான ஒடிசாவின் ஐன்ஸ்டீன் கட்டுரையில் பண்டா தனது இயந்திரங்கள் உருவாக்கும் ஆர்வத்திற்காக தனது மனைவியின் நகைகளையே விற்றிருக்கிறார் என்பதை படிக்கும்போது என்னால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. தோழர்களே! நமது தேசம் இயங்குவது இது போன்ற தன்னை எரித்து பிறருக்கு வெளிச்சம் மனிதர்களால்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இந்த கட்டுரைகளைப் படியுங்கள். உதவும் எண்ணம் இருக்கிறவர்கள் அதை தங்கள் பையில் உள்ள பணமாக கருத வேண்டியதில்லை. தங்கள் அறிவாக கூட கருதலாம். இன்று நாம் பெறும் பல உரிமைகள், வசதிகள் இவர்கள் போன்றவர்களால்தான் கிடைத்தது. அர்ப்பணிப்பும், நேர்மையும், திட்டமும் கொண்ட உழைப்பு  இல்லாமல் இவை சாத்தியமேயில்லை என்பதை இக்கட்டுரைகளைப் படித்தவுடன் உணருவீர்கள்.  நன்றி.

 

அன்புடன்,

கார்த்திக் வால்மீகி

Click Link For Download : http://freetamilebooks.com/ebooks/streetlight/

ariyaluradukudosai

அரியலூர் அடுக்கு தோசை….. இன்னபிற…..

முன்னுரை

AriyalurAdukuDosai

இது என்னுடைய இரண்டாவது மின்னூல். இதுவரை தொடர் எதுவும் எழுதியிருக்காத நான் முதல் முறையாக அரியலூர் அடுக்கு தோசை என்ற தொடரை ஆரம்பித்தேன். நாங்கள் அரியலூர் போயிருந்தபோது ஏற்பட்ட அனுபவத்தை சின்னச்சின்ன ஏழு பதிவுகளாக எழுதினேன். பலரையும் கவர்ந்தது இந்தப் பதிவுகள். அதையே இந்த மின்னூலின் முதல் கட்டுரையாகப் போட்டிருக்கிறேன். ‘சாதாம்மிணியின் அலப்பறைகள்’ போலவே இதுவும் படிப்பவர்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

ரஞ்சனி நாராயணன்

பதிவிறக்க*

Click Link For Download : http://freetamilebooks.com/ebooks/ariyaluradukudosai/

Meaning Of Life

வாழ்க்கையின் அர்த்தம்

வாழ்க்கையின் அர்த்தம்meaningoflife-cover-small2

துப்பறியும் கதைகளை விட்டு வாழ்வியலுக்குள், தத்துவத்திற்குள், மன உலகுக்குள் அடியெடுத்து வைக்கிறது எனது சமீபத்திய நூல். அன்றாட வாழ்க்கையில் அறியவரும் உண்மைகள், கனவுக்கும் புனைவுக்கும் இடையே தத்தளிக்கும் கணங்கள், மொழியின் போதாமைகள், குழந்தைகள் என விரிகிறது இந்நூலின் எழுத்துலகம். 2013ஆம் ஆண்டுக்கான ‘திசைகாட்டிப் பறவை’ விருது பெற்றது.

 

 

 

Click Link For Download : http://freetamilebooks.com/ebooks/meaningoflife/

Noolsolaullagu

நூல்சூழ்உலகு

தலைப்பு: நூல்சூழ்உலகுnsuc1

வகை     : கட்டுரைகள்

ஆசிரியர்கள்: பியர்சன் கயே, ஆலன்வான்கா

தொகுப்பு  : சார்லி ட்ராம்ப், ரோஸலின்கெல்லி

ஆக்கத்தலைமை: அய்லய்யா,மண்டேஸ்வாமி

தட்டச்சுப்பணி: பூங்கோதை, அய்யாவுராமன்

மின்னூல் பதிப்புரிமை: தி ஆரா பிரஸ், இந்தியா.

அட்டை வடிவமைப்பு: தி இன்னோவேஷன் பொட்டிக், இந்தியா.

வெளியீட்டு அனுசரணையாளர்: Komalimedai.blogspot.in

மின்னஞ்சல்: sjarasukarthick@rediffmail.com

மின்னூலாக்கம் & மின்னூல் வெளியீடு  – சிவமுருகன் பெருமாள் &sivamurugan.perumal@gmail.com

கிரியேட்டிவ் காமன்ஸ் உலகளாவிய உரிமம் 4.0 ன் கீழ் வெளியிடப்படுகிறஇந்நூலை எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி அனைவரும் படிக்கலாம்,பகிரலாம்.

 ஆசிரியர்கள் உரை

இந்த நூல் Komalimedai.blogspot.in வலைப்பூவில் எழுதிய பல்வேறு புத்தகங்கள் பற்றிய எளிய பகிர்தல்களாகும். புத்தகங்கள் என்பவை படிப்பவரின் வாசிப்பு, வாழ்வனுபவம் பொறுத்து பெரிதும் மாறுபடக்கூடியவை. ஒருவர் கண்டடைந்த தரிசனம் இன்னொருவருக்கு கிடைக்கவில்லை என்பதற்கு இதுதான் காரணம். எனவே ஒருபோதும், திரைப்படம், புத்தகம் என எதனையும் பொதுப்படையாக ஒரு அறிவை மக்களுக்கானதாக கொண்டு விமர்சனம் செய்துவிட முடியாது என்பதுதான் நாங்கள் கண்டடைந்த தெளிவு.

நாற்பதிற்கும் மேலான இந்தப்புத்தகங்கள் பெரும்பாலும் நண்பர்கள் மூலமாகவும், நூலகங்களிலும் வாசிக்கப்பட்டவைதான். இதில் புத்தகத்தேர்வு என்பது பெரிதும் பின்பற்றப்படவில்லை என்றாலும் அதனை இந்த நூல் வலியுறுத்தும் என்று நம்புகிறோம். மற்றபடி நூல் வாசித்தலால் யாரும் புனிதர், மகான் ஆகமுடியாது. பல வாழ்வனுபவங்களிலிருந்து சிறிது விசாலமான மனதை பெற, புத்தகங்களிலிருந்து பெற்ற சிந்தனைகளை சோதித்துப் பார்க்க வேண்டும். அப்போதுதான் வளர்ச்சி சாத்தியம். நமது பரிணாம வளர்ச்சிகூட எதை அதிகம் உடலில் பயன்படுத்துகிறோமோ அதுதான் இன்றைய நவீன காலம் வரை வளர்ந்து வந்திருக்கிறது. இன்று பலரும் தாம் என்ன படிக்கிறோம் என்று வெளிப்படுத்துவதில்லை. அறிவு என்பது பகிர்ந்துகொள்வதில்தான் வளருகிறது என்று முழுமையாக நாங்கள் நம்புகிறோம். அதன் வெளிப்பாடுதான் இந்த வாசிப்பு பகிர்தல் நூல். வாசித்துவிட்டு கருத்துக்களை கூறுங்கள். எழுத்துக்களின் தரத்தினை மேம்படுத்த அது பெரிதும் உதவியாக இருக்கும். இதனை உருவாக்கியதில் உதவிய ஆரா குழுவினருக்கும், படித்து பல விமர்சனங்களை நேர்மையாக பகிர்ந்துகொண்ட நண்பர்களுக்கும் நன்றிகள் கோடிசொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்.

அன்பார்ந்த வாழ்த்துக்களுடன்,

                                          பியர்சன் கயே, ஆலன் வான்கா

Click Link For Download : http://freetamilebooks.com/ebooks/noolsolaullagu/