பயத்தோடு வாழப் பழகிக் கொள்

bayam-cover

ஜோதிஜி திருப்பூர்

சென்னை

பயத்தோடு வாழப் பழகிக் கொள்

உருவாக்கம்: ஜோதிஜி திருப்பூர்

மின்னஞ்சல் – powerjothig@yahoo.com

 

எல்லாக் கருத்துக்களும் நூல் ஆசிரியருடையவையே.

உரிமை Creative Commons Attribution-Non Commercial-No Derives 3.0 Un ported License

மேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார்

மின்னஞ்சல்: socrates1857@gmail.com

 

மின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள்

மின்னஞ்சல் : sivamurugan.perumal@gmail.com

மின்னூல் வெளியீடு: த.ஸ்ரீனிவாசன்

மின்னஞ்சல் : tshrinivasan@gmail.com

உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

என்னுரை

தேவியர் இல்லம் திருப்பூர் http://texlords.wordpress.com/என்ற பெயரில்வேர்ட்ப்ரஸ் ல் 2009 ஜுலை மாதம் எழுதத் தொடங்கினேன . கடந்த நான்குஆண்டுகளாக ப்ளாக்கரில் தேவியர் இல்லம் http://deviyar-illam.blogspot.com/என்ற பெயரில் எழுதி வருகின்றேன் .

அனுபவம் , செய்திகள் , கட்டுரை , சமூகம் , பயணக்கட்டுரை , ஆன்மீகம் ,நெடுங்கதை , தமிழ்நாட்டு அரசியல் , இந்திய அரசியல் , சர்வதேச அரசியல் ,ஈழம் சார ்ந்த வரலாறு , தமிழர் வரலாறு , குழந்தைகள் குறித்த தொடர்நினைவலைகள் என்று அனைத்து தரப்பு விசயங்களையும் எனக்குத் தெரிந்தமொழியில் எழுதி வந்துள்ளேன் .

2013 ஆம் ஆண்டு என் முதல் புத்தகம் வெளியானது . 4 தமிழ் மீடியாவெளியிட்டார்கள் . அந்தப் புத்தகத்தின் பெயர் டாலர் நக ரம் . திருப்பூர்வாழ்வியல் குறித்து அலசும் அனுபவத் தொடர் சார்ந்த கட்டுரைகளின்தொகுப்பு . இந்தப் புத்தகம் தமிழின் முக்கிய இதழான ஆனந்த விகடன்வருடந்தோறும் அவர்கள் வெளியிடும் இயர்புக்கில் 2013 ஆம் ஆண்டின்சிறந்த பத்து புத்தகங்களில் ஒன்றாக தேர்ந்து எடுத்தார்கள் . அடுத்து கல்விகுறித்து எழுதப்பட்ட கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு புத்தக வடிவில் வரகாத்துக் கொண்டிருக்கின்றது .

அமெரிக்காவில் இருந்து வெளி வந்து கொண்டிருக்கும் வலைத்தமிழ்இணைய பத்திரிக்கையில் “ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்” என்றதொடர் வாரந்தோறும் (2014) வெள ்ளிக்கிழமை அன்று திருப்பூர்தொழிலாளர்களைப் பற்றி அலசும் வாழ்வியல் தொடராக கடந்த 19வாரங்களாக வந்து கொண்டிருக்கின்றது . இதுவும் புத்தமாக மாறவாய்ப்புண்டு .

கடந்த 2014 நவம்பர் வரைக்கும் நான் எழுதிய தலைப்புகளின் எண்ணிக்கை682, வந்த விமர்சனங்களின் எண்ணிக்கை 11,500. தேவியர் இல்லம்வலைபதிவை பார்வையிட்ட பார்வையாளர்கள் படித்த பக்கங்களின்எண்ணிக்கை 10 லட்சம் .

கடந்த இருபது வருடங்களாக திருப்பூரில் ஆய்த்த ஆடை ஏற்றுமதிதுறையில் பணியாற்றி கடந்த ஐந்தாண்டுகளாக ஒரு நிறுவனத்தில் பொதுமேலாளராக (GENERAL MANAGER) உற்பத்தித் துறை யில்பணியாற்றிவருகின்றேன் .

மனைவி பெயர் மாதவி . இளங்கலை வணிகவியல் பட்டதாரி . எனக்குதோழியாக , என் எழுத்துக்கு வாசகியாக குடும்பத்தின் இல்லத்தரசியாகஇருக்கின்றார் . எங்கள் இரட்டைக்குழந்தைகளின் பெயர் தர்ஷிணி , துர்க்காதேவி , கடைக்குட்டியின் பெயர் சங்கரி தேவி . முறைய ஆறாம் வகுப்புஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கின்றார்கள் . குழந்தைகள் மூவருக்கும்என் எழுத்து , இணையத்தில் செயல்பட்டுக் கொண்டிருப்பது , நான்எதைக்குறித்து எழுதுகின்றேன் போன்ற அனைத்து விபரங்களும் மிகநன்றாகவே தெரியும் .

மூவரும் என்னை எழுத்தாளன் என்று என ்னை ஒப்புக்கொள்ளவில்லை .காரணம் அவர்கள் கணினி பயன்படுத்தும் நேரத்தை நான் கடன் கேட்பதேஅவர்களுக்குண்டான பிரச்சனை . மூவரில் இருவருடன் சமூகத்தைப் பற்றிஇங்குள்ள அரசியல் அவலத்தைப் பற்றி அலசி ஆராய்வதே என் பொழுதுபோக்குகளில் ஒன்று . அந்த அளவுக்கு அவர்களை சக நண்பர்க ளாகமாற்றுவதில் வெற்றி அடைந்துள்ளேன் . எப்போது போல என் மனைவிஅவள் சின்னவட்டத்தை வெளியே வராமல் இன்னமும் அடம் பிடித்துக்கொண்டிருக்க குழந்தைகள் மூவருடனும் சேர்ந்து அவரை கலாய்ப்பதேஎங்களின் முக்கிய பொழுது போக்காக உள்ளது .

நான் வாழ்ந்து வந்த வாழ்க்கை , நான் வாழ்ந ்து கொண்டிருக்கும் வாழ்க்கை ,இதன் வழியே நான் பார்த்த சமூகம் இதன் மூலமாக பெற்ற பாடங்கள் , நான்பெற்ற தாக்கம் மற்றும் நான் உணர்ந்து கொண்டவைகளை இங்கேகட்டுரைகளாக “பயத்தோடு வாழப் பழகிக் கொள்” என்ற பெயரில் உங்களுக்குதொகுத்து கொடுத்துள்ளேன் . ஒவ்வொரு கட்டுரைக்கும் கீழே நான் எழுதியதேதியை குறிப்பிட்டு உள்ளேன் . அதன் மூலம் அந்த சம்பவம் நடந்தகாலத்தை உங்களால் ஒப்பிட்டுக் கொள்ள முடியும் .

இதில் உள்ள ஒவ்வொரு கட்டுரைகளிலும் நீங்களும் வாழ்ந்து இருக்கக்கூடும். சமூகம் சார்ந்த கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய பிரச்சனைகள்அனைத்தும் உங்கள் வாழ்க்கையோடு மட்டுமல்ல உங்கள் தலைமுறையின்வாழ்க்கையையும் பாதிக்கக்கூடிய அம்சமாகும் .

நடுத்தரவர்க்கத்தின் அங்கத்தினரான நாம் ஏதோ ஒன்றுக்காக பயந்துதினந்தோறும் நம் இருப்பை காப்பாற்றிக் கொள்ளத்தான் போராடிக்கொண்டே இருக்கின்றோம் . எத்தனை சமூகம சார்ந்த பிரச்சனைகள்நம்மைச் சுற்றி நடந்தாலும் நமக்கு அது நடக்கும் வரையிலும் நாம்அனைத்தையும் செய்திகளாகவே பார்த்து பழகி விட்டோம் . இது தான் நம்வாழ்க்கையின் எதார்த்தம் .

உணர்ந்து படியுங்கள் . உங்கள் உள்ளத்தில் தோன்றும் எண்ணங்களைமறக்காமல் எனக்குத் தெரியப்ப டுத்துங்கள் .

நட்புடன்

ஜோதிஜி திருப்பூர் .

Click Link For Download : http://freetamilebooks.com/ebooks/live-with-fear/

Leave a comment