அப்பாவி விஷ்ணு

AV
இது , முழுக்க முழுக்க நகைச்சுவைத் தூக்கலாக இருக்கும் மின்னூல் .
இந்த நூலில்  அறிமுகமாகும்  ராசி- விஷ்ணு  தம்பதி   என் கற்பனைக் கதாபாத்திரங்கள். அதில்  ராசி செய்யும் அட்டகாசங்களுக்கு, ஈடு   கொடுக்கும் விஷ்ணுவைப்  பரிதாபத்துக்குரியவராய்  சித்தரித்திருக்கிறேன். நீங்கள் ,உங்களையே கூட அந்தத் தம்பதிகளின் இடத்தில் சில சமயங்களில்  பொருத்திப்  பார்ப்பதை  தவிர்க்க முடியாது.
ராசி, விஷ்ணு தம்பதி மட்டுமல்ல  , ராசி செய்யும் அலம்பலக்ளும் கற்பனையே! விஷ்ணு ,ராசியிடம் மாட்டிக் கொண்டு தவிப்பதை நீங்கள்  ரசித்துப் படித்து விட்டு  ,வாய்விட்டு சிரிக்காமல் இருக்க மாட்டீர்கள்.
அதனாலேயே இந்த நூலிற்குப் பெயர்  ” அப்பாவி விஷ்ணு ” என்று பெயரிட்டிருக்கிறேன்.ஆணாதிக்கம், பெண்ணியம் என்கிற எந்த சிந்தனைக்குள்ளும்   இவர்கள் இருவரையும்  நான் சிறைப்படுத்தவில்லை. ஜாலியாக உலவ விட்டிருக்கிறேன். படிப்பவர்களுக்கு விஷ்ணு அப்பாவியாகத் தோன்றலாம். அவ்வளவே.,ராசி விஷ்ணுவை  எவ்வளவு சங்கடப்படுத்தினாலும்  ராசிஅவரின் காதல் மனைவி. இவர்கள் இருவரின் லூட்டியும் இந்த நூலுடன் முடிந்து விடவில்லை.
இந்த மின்னூல் ஒரு ஆரம்பமே. இவர்களின்  அட்டகாசங்கள்  தொடர்ந்து  வெளியிட ஆசை. அதற்காக உங்களின் மேலான ஆதரவை  எதிர் நோக்குகிறேன்.
இந்த நூல் வெளியாக உதவிய திரு. சீனிவாசன் அவர்களுக்கும் ,free tamil ebooks teamஇல்  இருக்கும் அத்துணை பேருக்கும் இத்தருணத்தில் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன்.
நன்றி.
ராஜலட்சுமி பரமசிவம்

 

ஆசிரியர் – ராஜலட்சுமி பரமசிவம்

அட்டைப் படம் – மூலம் – http://www.flickr.com/photos/zooboing/5583655546/sizes/o/in/photostream/

அட்டைப் படம் – வடிவமைப்பு – ப்ரியமுடன் வசந்த் vasanth1717@gmail.com
மின்னூலாக்கம் – ஸ்ரீனிவாசன் tshrinivasan@gmail.com

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

Click Link For Download : http://freetamilebooks.com/ebooks/appavi-vishnu/

Leave a comment